செக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி….

வத்தலக்குண்டு, குன்னு வாரன் கோட்டை அருகே செக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி.

பலமுறை முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நிர்வாகம். கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட ரோட்டை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக சரி செய்யாமலேயே அப்படியே விட்டு விட்டார்கள்.

கடந்த ஒரு வருடமாக இதே நிலை தான் தொடர்கிறது, அந்த இடம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. அருகிலேயே பள்ளிக்கூடம் உள்ளது குறிப்பிடத்தக்கது, பள்ளிக்க குழந்தைகளுக்கு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது, ஆகையினால் இந்த இடங்களில் ரோடு அமைத்து பள்ளி குழந்தைகளையும், செக்கா பட்டி ஊர் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .  

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!