அரசு நிதியை வீணடிக்கும் கீழக்கரை நகராட்சி…. முன்னேற்பாடுகள் இல்லாமல் சேதப்படுத்தப்படும் முக்கிய சாலைகள்…

கீழக்கரை பிரதான வள்ளல் சீதக்காதி சாலையானது முக்கு ரோடு முதல் கடற்கரை வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலைகளில் வயர்கள் பதிப்பதோ அல்லது வேறு எந்த வகையான பணிகள் செய்வதாக இருந்தாலும் நெடுஞ்சாலை துறையின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும். ஆனால் சமீப காலமாக அதிக அளவில் சாலைகள் தோண்டப்பட்டு சேதாரம் அடைந்துள்ளது.  இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதாக இல்லை.

இது குறித்து மக்கள் டீம் அமைப்பு காதர் கூறுகையில், “ரோடுகளை தன்னிச்சையாக யாருடய அனுமதி பெறாமல் கீழக்கரை நகராட்சி பொறியாளர் பிரிவு அலுவலர்கள் பல இடங்களையும் தோண்டி, தோண்டி சேதப்படுத் வருகின்றனர். நேற்றும் (04/05/2019)  மெயின்ரோடு பகுதியில் ரோட்டை உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நகராட்சிஎ்பொறியாளர் பிரிவு அலுவலர் சிவ சங்கரன் என்பவரிடம் கேட்டதற்கு “அப்படித்தான் உடைப்போம்”  என்று திமிராக பேசுகிறார்.

கடந்த காலங்களில் கீழக்கரை ரோடுகளின் நிலமை எப்படி இருந்தது என்று அனைவரும் அறிவர். பல சமூக நல அமைப்புகள் மற்றும்  அனைத்து கட்சிகள் பலபல போராட்டங்கள் செய்து அரும்பாடுபட்ட பின் பல லட்சங்கள் செலவில் சாலை இது. இவர்களுக்கு கிடைக்கும் சில ஆயிரங்களுக்காக முறையில்லாமல் சேதப்படுத்துகிறார்கள். இதனால்   நமதூர் பொதுமக்கள் தான் அவதிக்குள்ளாரகிறார்கள். இதே போல் ஊருக்குள் உள்ள ரோடுகளிலும் பாழ்படுத்தும் விதமாக வேகத்தடை பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அனுமதியுடன் போடப்பட்டுள்ளது இந்த பொறியாளரின் அனுமதியோடுதான்.

பொதுவாக  தொலை தொடர்பு நிறுவனத்தினர் கேபிள் பதிப்பது தொடர்பாக, நெடுஞ்சாலை துறை கீழக்கரை  நகராட்சிக்கு முறையாக பணம் செலுத்தி முறையாக வேலை செய்தனர்.அப்போது கூட இந்த அளவு சேதாரமடையவில்லை. ஆனால் கீழக்கரை நகராட்சியினரின் செயல் பொதுமக்களின் பாதிப்பை உண்டாக்கி ஆதாயம் தேடுவது போலவே உள்ளது. இதுகுறித்து பொறியாளர் பிரிவிலுள்ளவர்களின் மேல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மேலதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்படும்.” என கூறி முடித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!