தூத்துக்குடி வாலசமுத்திரத்திலிருந்து வெங்கடேஸ்வரபுரம் செல்லும் தார் சாலை அமைக்கும் பணி 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, ஜேசிபி வாகனம் மூலம் தார் சாலை தோண்டப்பட்ட நிலையில் தேர்தல் வந்ததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் நபர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள், இந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா என்ற கேள்விக்கு மூன்று மாத காலம் வரை ஆகலாம் என்ற தகவலைஒப்பந்ததாரர் மக்களிடம் கூறுகிறார் இந்தச் சாலையை மிக விரைவில் சீரமைத்துக் கொடுக்கும் படி வால சமுத்திர வெங்கடாசலபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதை நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொள்ளுமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












