இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காங்., கிராம ஊராட்சி, வார்டு, நகர், வட்டார மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க வட்டார, நகர் தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான ராம.கருமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான இராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பார்வையாளர்கள் டாக்டர். செல்வராஜ், அடையாறு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மகளிர் காங்கிரஸ ராமலட்சுமி, சேவாதள நிர்வாகி கணேசன், முன்னாள் ராணுவத்தினர் பிரித மாவட்ட தலைவர் கோபால், ஓபிசி பிரிவு தலைவர் பாஸ்கர சேதுபதி, கணேசன் மற்றும் வட்டார தலைவர்கள் பேசினர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

You must be logged in to post a comment.