இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியின் 120 ஆம் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை. ஆர்.அருண்மொழி வரவேற்றார். பள்ளி தாளாளர் ஆர் பி கே ராஜேஸ்வரி நாச்சியார் தலைமை வகித்தார். பள்ளி செயலர் ராஜ கே பி எம் நாகேந்திர சேதுபதி முன்னிலை வகித்தார். நடிகர் கலைமாமணி செந்தில் பேசினார்.
ராமநாதபுரம்.l இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் எஸ்.ரவிக்குமார் நன்றி கூறினார். மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி (திமுக மீனவரணி துணை அமைப்பாளர்), நகராட்சி கவுன்சிலர் பிஆர்என் ராஜாராம் பாண்டியன் (மாவட்ட காங் கமிட்டி பொருளாளர், ஆசிரியர் சே.கார்த்திகேயன், முன்னாள் மாணவர்கள் ஆர்.விஜயகுமார் (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்) ஜி.இளங்கோவன் (செய்தியாளர்), சண்முகநாத பாண்டியன், எஸ்.ரத்தினகுமார் (செய்தியாளர்) உட்பட பலர் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.