இராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா: 57 பயனாளிகளுக்கு ரூ.47.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

இராமநாதபுரம், ஆக.15 – இராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று காலை நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தி மூவர்ண பலூன்கள், சமாதானா புறாக்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பறக்க விட்டார். இதனை தொடர்ந்து தேச பக்தி பாடல் இசைக்கருவிகளின் ஒலியுடன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், தோட்டக்கலை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தாட்கோ, வேளாண் துறைகள் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.47.லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழக முதல்வர் பதக்கம் பெறும் காவல் துறையினர் பேர், மாவட்ட அளவில் சான்றிதழ் பெறும்: காவல் துறையினர் அரசின் பல்வேறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். 

சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார். டிஐஜி துரை, எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தப் ரசூல் உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, கோட்டாட்சியர் கோபு, தாசில்தார் ஸ்ரீதர், டிஎஸ்பி ராஜா, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, நகராட்சி ஆணையர் அஜீதா பர்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!