இராமநாதபுரத்தில் அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை..

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை நிறுவியதன் வெள்ளி விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து 133 அடி உயர மாதிரி அய்யன் திருவள்ளுவரின் சிலை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜுலு உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியரகம் வரும் பொதுமக்கள் திருவள்ளுவர் உருவச்சிலையை பார்வையிட்டு சென்றனர். திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவியதன் 25- ஆண்டுகள் நிறைவு விழா முன்னிட்டு மாவட்ட மைய நூலகத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, வினாடிவினாடி போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தோருக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 ரொக்கப்பரிசு , பாராட்டுச்சான்றுகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று வழங்கி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட மைய நூலக அலுவலர் அற்புத ஞான ருக்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, வாசகர் வட்ட தலைவர் மங்கள சுந்தர மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!