இராமநாதபுரம், ஜன.9- ஊதிய உயர்வு, ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2023 டிச.19ல் சிஐடியு, ஏஐடியுசி உள்பட 16 தொழிற்சங்கங்கள், டிச.20 ல் அண்ணா தொழிற்சங்க பேரவை வேலைநிறுத்த நோட்டீஸ் விநியோகித்தன. இதைதொடர்ந்து 3 கட்ட சமரக பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மக்களின் நலன் கருதி ராமநாதபுரம் புறநகர், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் ஆகிய 5 பணி மனைகளில் இருந்து 210 தொலை தூரப் பேருந்துகள், ராமநாதபுரம் நகர் பணிமனையில் இருந்து 32 வழித்தடங்களுக்கு 129 நகர்ப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழக ராமநாதபுரம் கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்டம் முழுவதும் 188 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வழக்கம் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









