இராமநாதபுரம், அக்.31- தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளின் தொடக்க விழா இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து போட்டிகளைத் துவக்கி வைத்தார் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அ.ரேணுகா வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உ.திசைவீரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கவிதா கதிரேசன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கல்வி அலுவலர் பி.சுதாகர் நன்றியுரை கூறினார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் முருகம்மாள் ,ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், என்.நாகேந்திரன், உதவித் திட்ட அலுவலர்கள் இ.செல்வராஜ், எஸ்.கர்ணன், டி.தர்மராஜ், நேர்முக உதவியாளர்கள் முனைவர். சுப.கணேசபாண்டியன், சி.ரவீந்திரன் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எம்.பாஸ்கரன், ஜி.புதுராஜா, ஆகியோர் ஏற்பாடு செய்ததனர்.


You must be logged in to post a comment.