அரேபிய தீபகற்பத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பாலைவனத்தை கொண்டுள்ள நாடாக சவூதி அரேபியா இருக்கிறது. சவுதி அரேபியா என்றவுடன் அனைவருக்கும் மனதில் வந்து நிழலாடுவது சுடும் மணல், ஒட்டகம், காய்ந்து கிடக்கும் நிலங்கள், சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்று, எந்த வித பொழுது போக்கிற்கும் வழியில்லாத ஒரு இடம், இப்படித்தான் எல்லோருடைய எண்ண ஓட்டங்களும் பொதுவாக இருக்கும்.
ஆனால் அரேபிய தலைநகரில் வருடா வருடம் நடைபெறும் ரியாத் வசந்தகால மலர் திருவிழா (RIYADH SPRING FLOWER FESTIVAL) இந்த எண்ணத்தையே முழுமையாக மாற்றி விடும். இத்திருவிழா வருடந்தோறும் வசந்த காலத்தில் பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் நாம் அன்றாடம் காணும் மலர்களில் இருந்து அரிய வகையான மலர்கள் வரை அனைத்து வகையான மலர்களும் கண்கவர் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு பல ஏக்கர் பரப்பளவில் பல வண்ணங்களில், பல வடிவங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாலைவனத்தின் நடுவே அமைக்கப்படும் இந்த பூங்காவனம் பார்ப்பவர்களை பரவசப்படுத்த மட்டும் அல்லாமல் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறது. உலகிலேயே அதிகமாக ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவில் உள்ள தாய்ஃப் நகரம் முன்னணி என்பது நமக்கு ஆச்சரியத்தை தரும் கூடுதல் தகவலாகும்.

இக்கண்காட்சியில் பூக்களை மட்டும் பார்வைக்கு வைக்காமல், அதன் துறை சார்ந்த தகவல் நிலையங்களும், இயற்கையான வாசனைப் பொருட்கள் விற்பனை நிலையங்களும், குழந்தைகளுக்கான பொருட்கள், ஆரோக்கியமான திண்பண்டம் விற்பனை நிலையங்களும் அமைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.








Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









