இராமநாதபுரம் முன்னாள் எம்.பி., மாரடைப்பால் மரணம்..

இராமநாதபுரம் முன்னாள் எம்பி., யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் , இலங்கை கண்டியில்  1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தார். முகவை குமார் என்றழைக்கப்பட்ட ரித்தீஷ் கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் அவர் நடித்துள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 2009ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி., ஆனார்.

இதன் பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி அருகே போகலூரில் நேற்று மதியம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார் . அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர் சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தலை தொடர்ந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ரித்திஷ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள வீட்டிற்கு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கட்ப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!