ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் !  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!

ராமநாதபுரத்தில் இருந்து பாரதி நகர் பட்டணம் காத்தான் ராம்நகர் குயவன்குடி சாத்தான்குளம் வாலாந்தரவை வழுதூர் விளக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காவேரி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது இதனை தொடர்ந்து உடைச்சியார்வலசை அருகே அய்யன் கோவில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பணி நடைபெற்ற பின்பு முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிரமப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அய்யன் கோவில் பேருந்து நிலையம் முக்கியமான இடமாகும் இந்தப் பகுதியின் வழியாக தான் பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது இதை கருத்தில் கொள்ளாமல் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியப் போக்கால் வாகனங்கள்  விபத்து ஏற்பட்டு வருகிறது. உயிர் பலி ஏற்படாமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம்  இப்பகுதியில் உள்ள பள்ளத்தை சரி செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனார். 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!