தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..?
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். தகவல் கேட்கும் நமக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். இந்த சட்டம் மூலம் தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பொது மக்கள் எவ்வாறு அரசு அலுவலகங்களுக்கு முறையாக விண்ணப்பித்து தகவல் பெறலாம்,? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? என்பது குறித்தும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மேல்முறையீடு குறித்து தகுந்த விளக்கத்துடன் பயிற்சி அளிக்கும் விதமாக கீழை நியூஸ் நிர்வாகத்தின் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு எதிர்வரும் ‘மார்ச் 25′ ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் பயிற்சி அளிக்க இருக்கிறார். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைய விரும்புபவர்கள் கீழ் வரும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விரைந்து உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன் பதிவு செய்ய தொடர்பு கொள்க : 9791742074

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









