இராஜபாளையம் பகுதிகளில் விளைந்த நெல்களை சாலைகளில் போடும் அவலம்.. செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அரசு..

இராஜபாளையம் பகுதிகளில் விளைந்த நெல்களை சாலைகள் போட்டு உரிய விலை கிடைக்காமலும், சேமிப்புக் கிடங்கு இல்லாமலும் அவதிப்படும் விவசாயிகள் என செய்தி எதிரொலியாக கொள்முதல் செய்த அரசு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்ட நேரி கண்மாய் , கடம்பன் குளம் கண்மாய் , பெரியகுளம் கண்மாய் என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு இராஜபாளையம் தென்காசி சாலை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த நெல் சேமிப்பு கிடங்கு மூடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடத்தை அதிகாரிகள் இன்னும் தேர்வு செய்யாமல் அலட்சியம் காண்பித்து வருவதால் நெல்களை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சாலை ஓரங்களில் களைப் போட்டு தார்பாய்கள் மூலம் மூடி பாதுகாத்து வருவதாக உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த செய்தி கடந்த 07.06.2020 நமது தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது அதன் எதிரொலியாக தற்போது அரசு தென்காசி சாலையிலும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றன புதிய நெல் களுக்கு 1865 ரூபாய் முதல் 1905 ரூபாய் வரை குவிண்டாலுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக செய்தி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!