இன்று (03-01-2018) கீழக்கரை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் , சமீபத்தில் நடந்த உத்திரகோசமங்கை திருவிழாவில் கீழக்கரை தாசில்தார் கணேசனிடம் கண்ணியக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்து தரக்குறைவான முறையில் நடந்து கொண்டார் என்று கூறி, காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் திங்கள் கிழமை அன்று மாவட்ட அளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்ததோடு, வருவாய்த்துறை அலுவலர்கள் மீது மாற்றி குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது பொதுமக்கள் செல்லும் வழியில் பாலசுப்ரமணியம் என்ற வருவாய் அலுவலர் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இடையில் ஆட்களை விட்டுக் கொண்டிருந்ததை கண்டித்த பொழுது, அங்கு
நின்று கொண்டிருந்த தாசில்தார் கணேசன், வருவாய்த்துறை அலுவலர் எவ்வாறு கண்டிக்கலாம் என்று பொதுமக்களுக்கு இடையூறு தரும் வண்ணம் செயல்பாடுகள் இருந்ததால் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு கடுமையாக கூறினேன், ஆனால் அவர்கள் குற்றம்சாட்டுவது போல் எனக்கு வடமொழியும் தெரியாது அதில் திட்டவும் தெரியாது, இது அபாண்டமான குற்றச்சாட்டாகும் என்று ஆணித்தரமாக மறுத்தார். மேலும் வருவாய்த்துறையினர் செல்வதற்கான பிரத்யேக வழி இருக்கும் பொழுது பொதுமக்கள் செல்லும் வழியில் இடைஞ்சலாக ஆட்களை இடையில் அனுப்பியதால்தான் இப்பிரச்சினையே உருவானது. என்னுடைய கடமையை தான் முழுமையாக செய்தேன், ஆகையால் செய்யாத குற்றத்திற்காக நூறு வருடங்கள் போராட்டம் நடத்தினாலும் மன்னிப்பு கேட்பேன் என்பதற்கு வழியில்லை, என்னுடைய கடமையைதான் செய்தேன் என்று கூறி முடித்தார்.
ஆனால் இப்பிரச்சினையால் பாதிக்கப் போவது பொதுமக்களதான் ஆகையால் இப்பிரச்சினை தீவிரம் அடையும் முன்பு, தலையிட்டு சுமூகமாக தீர்வு காண வேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













சுய அதிகாரம் படைத்த அரசு இருந்தால் தவறு செய்த அதிகாரி மீது குறைந்த பட்ச இடமாறுதல் நடவடிக்கையாவது எடுக்கலாம் ம்ம்ம்… என்ன செய்ய காலம் வரும்வரை காத்திருப்போம்