மதுரை மாநகரில் ரெட்அலர்ட் பகுதியில் பணியாற்றும் காவல்துறைக்கு முதல் மரியாதை….

கொரோனா பாதிக்கப்பட்டு தமிழகத்திலேயே முதன்முறையாக உயிரிழந்த மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.்மேலும் மதுரை மாவட்டத்தில் 41 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மதுரை மாநகர் பகுதியில் 34 இடங்களை ரெட்அலட் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறை யினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இரவு, பகல் பாராது பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களை கவுரவப்படுத்தும் விதமாக மதுரையைச் சேர்ந்த விஜயபாரதி என்ற பெண், தனது குடும்பத்தினருடன் வந்து காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள்  பெண் காவலர்கள் என இன்று காலை காவலர்கள் பணியில் இருக்கும் இடத்திற்கு சென்று பாதப் பூஜை செய்து, பொன்னாடை போர்த்தி, பழங்கள் வெற்றிலை பாக்கு என அனைத்தும் தாம்பூலத்தில் வைத்து  வழங்கி கௌரவப்படுத்தினர். நகர், மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று கவுரவப்படுத்தி வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!