சாகுபடி பாதிப்பு வறட்சி நிவாரணம் அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் தீர்மானம்..

இராமநாதபுரம்,ஆக. 12- இராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,400  வறட்சி நிவாரணம்  அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தலைமை வகித்தார். ஆனையர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக் கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவகாமி வரவேற்றார். 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும் என  லட்சுமி (திமுக), எஸ் ஆர்என் பழங்குளம் கிராமத்தில் இடிந்துள்ள சத்துணவு கூடத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்,  காமாட்சிபுரம்- சடையனேரி சாலையை தார் சாலையாக மாற்றித் தரவேண்டும் என  சசிகலா (அதிமுக), மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு தொய்வின்றி தண்ணீர் வழங்க வேண்டும். இது தொடர்பாக காவிரி கூட்டு குடிநீர் கண்டுகொள்வதேயில்லை. உரிய தபால் அனுப்பியும் யூனியன் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாதாந்திர செலவை அங்கீகரிக்கவே கூட்டம் நடத்தப்படுகிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சி சேர்மன், துணை சேர்மன் மற்றும் மாமன்ற, நகர் மன்ற, பேரூர் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் அறிவித்தது போல் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனஅர்ச்சுணன் (அதிமுக) பேசினர். சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஷ் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், பயிர் சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 அறிவித்த தமிழக முதல்வருக்கும், வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய ராமநாதபுரம் சட்ட காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!