தனியார் நிறுவனத்தில் மின்தூக்கியில் சிக்கிய ஊழியரை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்..

 மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகரில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் உள்ளது.  அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் வேலை நிமித்தமாக மேல்மாடிக்கு மின்தூக்கியில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக முதல் தளத்தில் மின்தூக்கி பழுதாகி நடுவழியில் நின்று உள்ளது.

பின்னர் அதிர்ஷ்டவசமாக மொபைல் போணில் சிக்னல் இருந்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு அழைத்து கூறியுள்ளார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீன்தூக்கி உள்ளே சிக்கியிருந்து ஊழியரை மீட்டனர்.

இதற்கிடையில் அப்பகுதி மக்களும் முயற்சி செய்த நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து உனடியாக உதவியது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!