முழு ஊரடங்கு காரணமாக மதுரை நகருக்குள் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாவட்ட எல்லையில் நிறுத்தம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் தகவல்…

மதுரை மாவட்டத்தில் மாநகர எல்லை பகுதி கிழக்கு மேற்கு திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு 24ஆம் தேதி அதிகாலை முதல் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் முழுமையாக பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் சிவகாசி ராஜபாளையத்தில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காரியாபட்டி வரை மட்டுமே இயக்கப்படும்

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்படும்

சிவகங்கை மார்க்கத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பூவந்தி வரை மட்டுமே இயக்கப்படும்

சிங்கம்புணரி கொட்டாம்பட்டி மற்றும் திருப்பத்தூர் மார்க்கத்தில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்

நத்தம் பகுதியில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும்

திண்டுக்கல்லிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்

தேனி உசிலம்பட்டி வழியாக மதுரை மார்க்கமாய் இயக்கப்படும் பேருந்துகள் செக்கானூரணி வரை மட்டுமே இயக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!