விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நகரும் நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நியாய விலை கடை அமைத்து தர கோரி மணல்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சக்கரப்ப நாயக்கனூர்ஊராட்சி மன்ற தலைவர் ஜென்ஸி சுப்பிரமணி தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் செய்தனர் அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் நியாய விலை கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது இதனை அடுத்து நேற்று உசிலம்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உசிலம்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் துணை வட்டாட்சியர் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சக்கரப்ப நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் வரும் ஜனவரி 28 தேதிக்குள் S. மணல்பட்டி கிராமத்தில் நகரும் நியாயவிலைக் கடை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தனர் இந்த கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணல்பட்டி கிளைச் செயலாளர் சேகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் முருகன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் மணல்பட்டி கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!