மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி பணியாளர்கள் தங்களது மூன்று அம்ச கோரிக்கை அரசிடம் முன்வைத்தும் நிறைவேற்றாத அரசை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி; விற்பனையாளர்களுக்கு அனைத்துவகை பொருட்கள் எடை குறைவாக இருந்தால் அபராத தொகை விலையை இருமடங்காக உயர்த்தியதை கண்டித்தும் அரசு உப்பு தேயிலை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் சங்க செயலாளரின் அனுமதியின்றி முதன்மை சங்கங்கள் அவர்களின் சுய லாபத்திற்காக ஆட்டா மாவு சுக்கு மல்லி காபி தூள் வெடிபொருட்கள் சோப்பு உள்ளிட்ட பொருட்களை உபரியாக விற்க கூறி பனையாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைக் கண்டித்தும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்டத்தில் ரேஷன் கடைக்கு அருகே பணிகள் வழங்க வேண்டும் எனவும் தங்களின் இந்த மூணு அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதாக அறிவித்து உசிலம்பட்டி மதுரை ரோட்டிலுள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன் 2ம் நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்… தீபாவளி பண்டிகை நேரத்தில் உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
.உசிலை மோகன்
You must be logged in to post a comment.