விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள மாவட்ட ஆட்சியராவது இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தருவார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் மனு அளிக்க வந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

இளைஞர்கள் நலன் கருதி, திருப்பாலைக்குடி ஊராட்சியில் விரைவில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. விடியா திமுக ஆட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறியாகவே

உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!