ராமநாதபுரம் அடுத்துள்ள அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் இடம் மாற்றம் செய்ய உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு அரசு அறிவித்து இடத்திலே அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை சட்டப்மன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகன் குளம் ஊராட்சியில் உள்ள அரசுப்பளியில் பழங்கால பொருட்கள் கிடைத்து. இதனைதொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 8 கட்டங்களாக ஆகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், ரோமானிய நாட்டுமது குடுவைகள், மீன், புறா, மயில் உருவங்களுடன் கூடிய பானை ஓடுகள், மௌரிய ஆட்சிகாலத்தில் பயன்படுத்திய வழவழப்பிலான பானை ஓடுகள், மேலும்இ கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னனால் வெளியிடப்பட்ட காசும் கிடைத்தது.
கலை நயமிக்க யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடுமண், பாண்டங்கள், தானியங்களுடன் தானிய சேமிப்பு கட்டுமான பகுதி, மண்பாண்டங்கள், மதுக்குடுவைகள்,ரோமானியர்களின் பிளஸ் குறியீடுகளுடன் கூடிய மரத்தாலான அச்சு குத்தி , இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளது
இதனைதொடர்ந்து, அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைத்து பொருமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு அழகன்குளத்தில் நாவாஸ் அருங்காட்சியம் அமைக்கப்படும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அழகன்குளத்தில் அமைக்க வேண்டிய நாவாஸ் அருங்காட்சியம் மண்டபத்திற்கு மாற்றம் செய்யபட கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அழகன்குளம் கிராமத்தில் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்;டு அருங்காட்சியம் அமைக்க வேண்டும். இடம் மாற்றம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.