கடம்பூர் பஞ்சாயத்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுக்கா கடம்பூர் பஞ்சாயத்து கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் முதியோர்கள் ஆகியோர் இணைந்து சமூக ஆர்வலர் வள்ளி நாராயணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் சந்தித்து மனு வழங்கினர். அவர்கள் கூறியதாவது : கடம்பூர் கிராமத்தை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 1990ம் ஆண்டில் ஆதி திராவிடர்கள் குடியிருப்புகள் வழங்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்து இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளது பலமுறை அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஏழ்மையாக வாழ்வதாலும் கணவரை இழந்தவர்கள் முதியவர்கள் உட்பட பல்வேறு கிராம மக்கள் வசித்து வருவதால் வீடுகள் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஆகும் முன்பாக ஆதி திராவிடர்கள் குடியிருப்பை உடனடியாக சீரமைப்பு செய்து உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!