இராமநாதபுரம், நவ.1- தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை-ராமேஸ்வரம் என இரு மார்க்கங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எம்பி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி விடுத்துள்ள கோரிக்கை: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வெளியூர்களில் பணி செய்பவர்களாகவும், வியாபாரம் செய்வோராகவும் உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்ப அவர் தயாராகி வருகின்றனர். வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு இலகுவாக வந்து செல்லும் வகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வந்து திரும்பும் வகையில் சென்னை- ராமேஸ்வரம் இடையே நவ. 9, 10ல் சிறப்பு ரயில், ராமேஸ்வரம்-சென்னை இடையே நவ.13, 14 ல் சிறப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.