தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். மனுவில், சாம்பவர் வடகரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு திருமண மண்டபம், குடிநீர் வசதி மற்றும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றுத்தர வேண்டும் என திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலனிடம் பேரூர் செயலாளர் முத்து மற்றும் பேரூராட்சி தலைவி சீதா லட்சுமி முத்து ஆகியோர் கோரிக்கை மனு வழங்கி இருந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு இந்திரா காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கோரிக்கை மனு வழங்கினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள கோரிக்கை மனு வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









