இராமநாதபுரம் வாரச்சந்தை கூடுமிடத்தை மாற்ற மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் வலியுறுத்தல்..

இராமநாதபுரம், ஆக.5 – ராமநாதபுரம் வாரசசந்தை கூடும் இடத்தை மாற்ற வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பா்க ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புனரமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. இதனால், ராமநாதபுரம் நகரில் புதன் கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தை ஜூலை 12 ஆம் தேதி முதல் பட்டணம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச்சந்தை தற்போது நகர் எல்லை தாண்டி நடைபெறுவதால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற முடிவெடுத்த அதிகாரிகள் இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கருத்தை கேட்கத் தவறிவிட்டனர். பொதுமக்கள் வசதியை கருத்தில் கொள்ளாமல் வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்றிய செயல் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அனைத்து தரப்பினரும் சிரமம் இன்றி வந்து செல்லக்கூடிய இடத்தில் வாரச்சந்தை செயல்பட மாற்று இடத்தை தேர்வு செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு மகர் நோன்பு திடல் போன்ற இதர இடத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!