கீழக்கரையில் கருவூலம் அமைய கோரிக்கை…

கீழக்கரையில் இயங்கி வரும் சமுகசேவை அமைப்பான மஜ்ம- உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை(MHCT) சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கோரிக்கை மனுவில் இஸ்லாமிய கல்வி சங்கமும் வேண்டியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயனடையும் வண்ணம் கடந்த 2004 ஆண்டு கீழக்கரை தனித்தாலூகா உருவாக்கப்பட்டு அதன் புதிய அலுவலகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்புவிழா கண்டு கீழக்கரையில்செயல்பாட்டுக்கு வந்துள்ளது.ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் இன்னும் சார்நிலை கருவூலம் அமைக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்களும்,ஆசிரியர்,அரசு ஊழியர்களும் தங்கள் கருவூல பணிகளுக்காக இன்னும்இராமநாதபுரம் கருவூலத்திற்கே செல்ல வேண்டியுள்ளது.இதனால் நேரவிரயமும்,பணவிரயமும்,வீண் அலைச்சலும் உருவாகிறது .ஆகவே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தாலுகா தலைநகராகிய கீழக்கரையில் சார்நிலை கருவூலம் அமைத்து தருமாறு கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!