மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம்..மின்வேலி அமைத்து தர கோரிக்கை..

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம். தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை. மின்வேலி அமைத்து விவசாயிகளை காக்க வேண்டுமென என அரசுக்கு கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர் ஒருவர் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் மா மரங்களை யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி மாங்காய் மற்றும் தென்னை மரங்களை தூர்ரோடு சாய்த்து தென்னங்குருத்து சாப்பிட்டு சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாம்பழம் குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் நம்மிடம் கூறும்பொழுது இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுமார் குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆக மா மரங்கள் மற்றும் தென்னை, வாழை போன்ற விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாமரங்களை குறிவைத்து காட்டு யானை கூட்டங்கள் தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு மா மரங்களை ஒடித்து மாங்காய்களை சாப்பிட்டும், தென்னை மரங்களை சாய்த்தும் சேதபடுத்தி வருகின்றது. இது குறித்து பலமுறை வனத்துறைக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த பகுதியில் மின் வேலி அமைத்து விவசாயிகளையும், விவசாய பயிர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!