விருதுநகர் மாவட்டத்தில் வேலை இழந்து உள்ள ஒலி ஒளி பந்தல் அமைப்பாளர்கள் நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலை இழந்து உள்ள ஒலி ஒளி பந்தல் அமைப்பாளர்கள் நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திருமண நிகழ்ச்சியோ கோயில் நிகழ்ச்சிகளோ விமர்சியாக நடைபெறவில்லை. இந்த விழாக்களை நம்பி ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் பந்தல் அமைப்பு தொழிலை நம்பி விருதுநகர் மாவட்டத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாத காரணத்தால் இவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறியும் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்திட மானியத்தில் கடன் உதவி செய்திட வேண்டும் எனவும் சிறிய அளவிலான சுபநிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் ஒலி ஒளி அமைத்திட விலக்கு அளிக்க வேண்டுமென கோரி மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!