தூத்துக்குடியில் நடைபெற்ற 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட தருவை விளையட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுதப்படை,
ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுககளை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். பின்னர், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற கலை கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி


You must be logged in to post a comment.