கீழக்கரை, கும்பிடுமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை முகைதீனியா பள்ளியில் வில் மெடல் கலைவாணி கொடியேற்றினார். இந்நிகழ்வில் கீழை பதிப்பகத்தின் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 70 ஆம் ஆண்டு குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடு மதுரையில்70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது ஜமாத்தாளர்கள் முன்னிலை வகித்தனர் கும்பிடு மதுரை பள்ளி ஆலீம் அவர்கள் கொடி ஏற்றிவைத்துசிறப்புறையாற்றினா.தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.மாணவர்கள் பல்வேறு தலைப்புக்களில்பேசினர்.உதவியாசிரியை நன்றி கூறினார்.
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கீழக்கரை நகர் சார்பாக 70 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது ” குடியரசு தேசத்தில் பறிபோகும் குடிமக்களின் உரிமைகள் ” என்ற மையக்கருத்தில்
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பிய உணவை உண்ணும் உரிமை, படிப்புரிமை , தவறுகளை விமர்சிக்கும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மத்திய அரசின் ஒத்துழைப்போடு சங்பரிவார் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட அக்லாக், ஜுனைத், அன்சாரி , ஆஷிபா, தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ், அரியலூர் அனிதா, நந்தினி, குடியுரிமை பறிக்கப்பட்ட அசாமிய முஸ்லிம்கள் , ரோஹித் வெமூலா தற்கொலை மற்றும் கண்ணையா குமாரின் பாசிச அடக்குமுறை போன்ற நிகழ்வுகள் குறித்த கருத்துரையை வெல்ஃபேர் பார்ட்டி சென்னை துறைமுகம் தொகுதி மண்ணடி பகுதி பொறுப்பாளர் தோழர் முஸம்மில் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழர் பர்ஹான், கவ்ஸர் சிறப்பாக செய்து இருந்தனர்.
நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கட்சியான #SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 9-மணியளவில் நகர் தலைவர் கீழை அஸ்ரப் தலைமையில் நடைப்பெற்றது.
நகர் செயலாளர் அப்துல் காதர்_வரவேற்புரை நிகழ்த்தினார். கீழக்கரை நகர பொருளாளர் சகுபார் சாதிக் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்
தொகுதி துணை தலைவர்-சித்திக் மற்றும் தொகுதி செயலாளர்- நூருல் ஜமான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் நகர் தலைவர்-முபிஸ் மற்றும் நகர துணை தலைவர்_யாஸீன் மற்றும் மேற்கு கிளை செயலாளர்-அசார் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. கிழக்கு கிளை தலைவர்-பஹ்ருதீன் நன்றியுரையாற்றினார்..
கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் தாளாளர் முகைதீன் இபுராஹம் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கீழக்கரை அல் பைய்யினா பள்ளியிலும் குடியரசு தின விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் முஹமது அஜிஹர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் தாளாளர், முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம், போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற முழக்கத்தோடு விழுப்புணர்வு பதாகைகள் ஏந்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
கீழக்கரை தீனியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை இந்திய 70வது ஆண்டு குடியரசு கொடியேற்று தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஹாஜி P.A.S.நூருல் அமீன் காக்கா, ஜனாப் S.நூருல் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை கவுரவிக்கும் பொருட்டு பள்ளியில் பயிலும் மாணவி பிருந்தா தேவி யின் தாயார் திருமதி தேவிகா அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றினார்கள். அவர்கள் சிறுஉரை ஆற்றும் போது மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் பயில வேண்டும் என அழகாக பேசினார்கள்.அதுபோல் பள்ளி முதல்வர் அவர்கள் பேசும் போது மாணவ மாணவிகள் தொடர்ந்து படித்து நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் பெற வேண்டும் என தெளிவாக பேசினார்கள்.
பள்ளியில் பயிலும் ஒரு மாணவி எது சுதந்திரம் என்ற தலைப்பில் ஆழமான கருத்துடன் பேசியது எல்லோரிடமும் கைதட்டல் ஒலித்தது. நிகழ்ச்சி கடைசியில் சிறு மாணவ மாணவிகளின் பேச்சு திறன், கோலாட்டம் போன்ற நிகழ்வுகள் நடந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் தாய்மார்கள் அணைவருக்கும் சாக்லேட் தேனீர் வழங்கினர். பள்ளி தாளாளர், மேலாளர், ஆசிரியர்கள் அன்புடன் அணைவரையும் வரவேற்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


















































