இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக் கொடி ஏற்றினார். காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மேற்பார்வையில் துவங்கிய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். அமைதிப் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.
பல்வேறு துறைகள் சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 54 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், பிற துறைகளில் சிறப்பான பணி, தன்னார்வலர்களின் சேவையை பாராட்டி 183 பேருக்கு நன்மதிப்பு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பல்வேறு பள்ளி, கல்னூரி மாணவ, மாணவியரின் தேசப்பற்றை உணர்த்திய கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என். காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமாலினி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் கண்ணன், வெள்ளைத்துரை, காவல் கண்காணிப்பாளர் நடராஜன், கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, சமூக நல அலுவலர் குணசேகரி, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் கோபிநாத், தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









