பாண்டிச்சேரி மர்கஜ் அல் இஸ்லாஹில் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்பு பட்டி மன்றம் நடைப்பெற்றது.
நாட்டுப்பற்று என்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி. இறை நம்பிக்கை கொண்டவர்கள் நாட்டுப் பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள். எவருடைய நாவாலும் கரங்களாலும் பிறர் அமைதி பெறுவார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக ஒரு முஸ்லிமிற்கான இலக்கணத்தை வகுத்தளித்து உள்ளனர்.
இதனடிப்படையில், கல்லூரி நிறுவனர் சையித் நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி, கல்லூரி முதல்வர் சையித் முஹம்மது ஆதில் நிஜாமி பிலாலி M.Phil, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி வரும், அரபி கற்றறிந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான பட்ட மேற்படிப்பு கல்லூரி, மர்க்கஜ்-அல்-இஸ்லாஹ் அரபிக்கல்லூரியில் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக (டாக்டர் மேகநாதன் எம்.டி. இணை பேராசிரியர் ஆறுபடை வீடு மருத்துக்கல்லூரி அவர்கள்) கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்பித்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முஸ்லிம்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது. கல்வி&அரசியல் தளங்களிலா.. (அல்லது) சமய &சமூக சேவைகளிலா.. என்ற தலைப்பில் சிறப்பான பட்டி மன்றம் நடைப்பெற்றது.
செய்தி:- அஸ்கர், திண்டுக்கல்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















