தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 70-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு வ.உ. சிதம்பரனார் துறைமுகத் தலைவர் டி.கே.ராமசந்திரன், தேசிய கொடியை ஏற்றி மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவியர் படை மற்றும் துறைமுகப் பள்ளி மாணவ, மாணவியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 2017-2018ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு, கப்பல் முகவர்கள், ஸ்டீவ்டோர்,ஸ்டீமர் ஏஜென்சி, சுங்கதுறை சங்கம், சரக்குபெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் அவர் பேசுகையில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிக்கும் வகையில் துறைமுகத்தின் கப்பல்கள் உள்ளே வரும் வழிதடத்தினை 17.20 மீட்டராகவும், கப்பல் தளப்பகுதியினை 16.50 மீட்டராகவும் ஆழப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தபட உள்ளது. தற்போது உள்ள கப்பல் நுழைவு வாயிலை விரிவுப்படுத்தும் பணி மற்றும் கப்பல்தளங்களை பலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென்னிந்தியாவின் சிறந்த துறைமுகமாக விளங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இந் நிகழ்ச்சியில் துறைமுக துணைத்தலைவர் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












