திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகராட்சியின் முன்பாக நகராட்சி ஆணையாளர் முருகேசன், சுகாதாரத்துறை அலுவலர் சுப்பையா மகாத்மா காந்தி திருஉருவ சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் நகராட்சி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் பின் இனிப்ப்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைத்து சங்கங்களும் பொதுமக்களுக்கும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் வில்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜா மாரீஸ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் பல கலை நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது பின்னர் கொடைக்கானல் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் பின்பு நாயுடுபுரத்தில் உள்ள அல் கலாம் என்ற தனியார் பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கீழை நியூஸ் செய்திகளுக்காக கொடைக்கானல் செய்தியாளர் கோடைரஜினி…..







You must be logged in to post a comment.