திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்திகள் தொலைக்காட்சி செய்தியாளர் பல்லடம் நேச பிரபு அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வலியுறுத்தல்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து . அவர் வெளியே வந்ததும. சரமாரியாக அந்த மர்ம கும்பல் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தி தப்பியோடியுள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது , செய்தியாளரை தாக்கப்பட்டவர்களை உடனே கைது செய்து அவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து இனி இதுபோன்று தாக்குதல் நடக காவண்ணம் குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் வகையில் நடைவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,
செய்தியாளர் நேச பிரபு அவர்களின் சிகிச்சைக்கு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.3 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்க உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவுத்துக் கொள்கிறேன்.
சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.