பெரியகுளம் பத்திரிக்கையாளர் தாக்குதல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்….

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சார்ந்த சாதிக் பாட்சா எனும் பத்திரிக்கை நிருபர் மணல் அள்ளுவதை படம் எடுக்க முயன்ற பொழுது அங்குள்ள சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவத்தில் அரசியல் முன்னனி இருக்க கூடும் என அறியப்படுகிறது. தற்சமயம் தாக்குதலுக்கு உண்டானவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் “காவல்துறை உடனடியாக நிருபர் சாதிக்பாட்சாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் A. முஹம்மது சித்திக் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில்  பாதிக்கப்பட்ட நிருபர் சாதிக்பாட்சாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்ட தலைவர் ஜமால் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!