மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி? எந்தெந்த ஊர்?..விபரம்..

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 18ந் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு மக்கள் வாக்களிக்க முடியாமல் போனது. சில இடங்களில் கட்சி நபர்கள் கள்ள ஓட்டு போட முயற்சித்த போது கையும் களவுமாக சிக்கினர். அதேபோல் பொன்னமராவதி, பொன்பரப்பி உள்ளிட்ட இடங்களில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகளிலும், பூந்தமல்லி, கடலூரில் தலா 1 வாக்குசாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!