நிலக்கோட்டை அருகே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தொழிற்சாலை திறப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

நிலக்கோட்டை அருகே முசுவனுத்து ஊராட்சியில் உள்ள நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள  தனியார் ஆலை கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வந்தது.     இந்நிலையில் இந்த ஆலையில் வேலை செய்த 22 நபர்களை  கர்நாடகா பகுதிக்கு  இடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது..

இதனைக் கண்டித்து ஆலையில் வேலை செய்த சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.   இதன் காரணமாக தற்காலிகமாக ஆலை மூடப்பட்டது.    இதனைத் தொடர்ந்து ஆலையில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய அதிகாரிகளிடம் நேரில் சென்று ஆலையை திறந்து வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலை நிர்வாகத்தையும், தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை அதிகாரிகள் நடத்தினர்.  அதனை ஏற்று தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை திறந்தது.   மில்லை திறந்தவுடன் வழக்கம்போல் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் வேலைக்கு திரும்பினார்கள். இருப்பினும் இதில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!