கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற நினைப்பை மறந்தவர்களாக இம்மை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமறை குர்ஆன் “நன்மையை ஏவி தீமையை அழிக்கட்டும்” என்று வலியுறுத்துவது போல் ஒரு பிரிவினர் இத்தனை பரபரப்புக்கு இடையிலும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் கீழக்கரை தஃவா குழுவைச் சார்ந்த அன்பர்கள் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் பங்கு பெறும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஒன்றை வரும் ஜனவரி,17ம் தேதி ஏற்பாடு செய்துள்ளார்கள். நம்முடைய மறுமை வாழ்கை சிறக்க இம்மையிலும் நாம் செய்ய வேண்டிய காரியங்களை விளக்கும் வண்ணம் இப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி விபரங்கள் கீழே:-

நாள் : 17 ஜனவரி 2018 நேரம் : மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரை இடம் : இஸ்லாமியா பள்ளி மைதானம்(குளத்து மேடு), MYFA சங்கம் அருகில், புதுத்தெரு, கீழக்கரை.

அறிமுக உரை (4:30 முதல் 5:00 மணி வரை )

தலைப்பு: அழைப்பு பணியும் , மார்க்க கல்வியும். உரை : அஷ்ஷேய்க் அப்துல் மஜீது மஹ்லரி* (முதல்வர், ஆயிஷா சித்திகா மகளிர் அரபிக் கல்லூரி)

சிறப்புரை (5:00 மணி முதல் 6:10 வரை)

தலைப்பு: அழைப்பு பணி அன்றும் இன்றும். உரை: அஷ்ஷேய்க் கமாலுதீன் மதனி. (மூத்த அறிஞர், முன்னாள் தலைவர், JAQH)

பெண்களுக்கான சிறப்புரை (6:30 மணி முதல் 7:30 வரை)

தலைப்பு: பெண்களே நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்.. உரை : அஷ்ஷேய்க் அப்துல் மஜீது மஹ்லரி. (முதல்வர், ஆயிஷா சித்திகா மகளிர் அரபிக் கல்லூரி)

கலந்துரையாடல் & கேள்வி பதில் நிகழ்ச்சி.. (7:45 மணி முதல் 8:30 மணி வரை)

இந்தப் பொதுக்கூட்டத்தில் பெண்களும் சிரமம் இல்லாமல் கலந்து கொள்ளும் வகையில் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!