சுரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.உரிய இழப்பீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெண்டையம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு எதிர்வரும் ஜனவரி 09 அன்று தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு பூதலூர் வட்டாட்சியர் மறிய ஜோசப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பூதலூர் வேளாண்துறை உதவி இயக்குனர் ராதா,பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை திருவெறும்பூர் கோட்ட உதவி கோட்ட பொறியாளர், உதவிப்பொறியாளர்,பூதலூர் காவல் உதவி ஆய்வாளர்,செங்கிப்பட்டி சரக வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் கோ.சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர்,ஒன்றிய செயலாளர் இரா.முகில் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கூட்டத்தில்,சொரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி கிராமங்களில் தொடர் கனமழையால் பாதிப்பிற்க்கு உள்ளான நெற்பயிர்களுக்கு 40% வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் என வேளாண்துறை உதவி இயக்குனர் அவர்களால் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் வடுகன்புதுப்பட்டி ஏரி வடிகால் தொடர்பாக பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுடன் வட்டாட்சியர் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு கண்டிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால் நாளை நடைபெறவிருந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.


You must be logged in to post a comment.