இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன், 41. சுமைப் பணியாளரான இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், 8ம் வகுப்பு, ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன்கள் உள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன் லாரியில் ஏற்றிய பாரம் சரிந்து விழாமல் இருக்க கயிறால் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். குடும்ப செலவிற்கு பணமின்றி கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவ உதவி செய்ய வேண்டும் என மக்கள் குறை தீர் நாள் முகாம், கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு முறையான நிவாரணம் ஏதும். கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று இராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர் நாள் முகாமில் மீண்டும் மனு கொடுக்க சவுந்திர பாண்டியை அவரது மனைவி கல்யாணி வாடகை காரில் அழைத்து வந்தார். இக்கோரிக்கை மனு மீது தொடர்பாக துரித விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் நடராஜன் சிறப்பு நிவாரண தொகுப்பு நிதியில் இருந்து ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை சவுந்திரபாண்டி மனைவி கல்யாணியிடம் வழங்கினார். அரசு மருத்துவமனையில் சவுந்திரபாண்டிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுவதாகவும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உறுதி அளித்தார். நிவாரண நிதி பெற்றுக்கொண்ட சவுந்திரபாண்டி மனைவி கல்யாணி மற்றும் உறவினர்கள் தமிழக அரசுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.



You must be logged in to post a comment.