*வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய யுனைடெட் கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகள்..*
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழும அறக்கட்டளை சார்பாக, யுனைடெட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, யுனைடெட் நர்சிங் கல்லூரி, யுனைடெட் பிசியோதெரபி கல்லூரி, யுனைடெட் பார்மஸி கல்லூரி, யுனைடெட் காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு குடியமர்த்த தேவையான பாத்திரங்கள் விரிப்புகள் பாய்கள் பக்கெட் குடம் உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் தோழர்களிடம் வழங்கினர்.
தற்போது முகாம்களில் தங்கி இருப்பவர்கள், மறுகுடியிருப்பு அமர்த்தப்படும்போது தேவைப்படும் பொருட்களை இந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் வாங்கி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், யுனைடெட் நர்சிங் கல்லூரி முதல்வர் முனைவர் ரூபி அனிதா, பேராசிரியர்கள் குமரேசன், தனுஷ், சோஜி மற்றும் மாணவர்கள் கவி பாரதி, ரஹீப், அபில் சாஜ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்..
You must be logged in to post a comment.