தமிழக மீனவர்களின் 50 விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை முதல் கட்டமாக விடுவித்து இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சக செயலரின் பரிந்துரையை அடுத்து 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை விடுதலை செய்துள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் 5ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் துவங்கவுள்ளதால், எஞ்சிய 137 விசைப்படகுகளை இன்னும் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படலாம் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!