இன்றைய நவீன உலகில் பலவேறு விசயங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் வேலையில் சுமூகமாக இருக்க வேண்டிய உறவுகளில் தடுமாற்றமும், விரிசல்களும் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த விரிசல் தந்தை – மகள், தகப்பன் – மகள், தாய்-பிள்ளைகள், சகோதர – சகோதரிகள் என்று நீண்டு கொண்டே செல்கிறது. காரணம் நிலைக்கு தகுந்தாற் போல் நம்மை நாமே மாற்றிக் கொள்ளாததுதான் முக்கிய காரணம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நமக்குரிய பொருளை மற்றவருக்கு என முழு அதிகாரம் கொடுத்த பின்பு மீண்டும் அதில் ஏறி நாம் முன்னுரிமை எடுக்க முயற்சிப்பதுதான். உதாரணமாக பெண் பிள்ளையை பெற்ற தகப்பன், தான் செல்லமாக வளர்த்த மகளை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு, அப்பெண்ணிண் மீது முழு உரிமையும் அந்த கணவனுக்கு சென்று விடுகிறது. அந்த பெண்ணின் நல்லது, கெட்டது என அனைத்திற்கும் அப்பெண்ணிண் கணவனே பொறுப்புதாரியாக மாறிவிடுகிறான். ஆனால் தன் பெண்ணிடம் பாசத்தை காட்டுகிறோம் என எண்ணி கணவனின் அதிகாரத்தை மீறி சில காரியங்களில் ஈடுபடும் பொழுது கணவனுக்கு மனைவியின் பெற்றோர் மீது உண்டாகும் மன உளைச்சலே நாளடைவில் தம்பதிகளுக்கிடையே பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. சுருக்கமாக சொன்னால் கணவன் – மனைவி என்ற இருவர் தாராளமாக அமர்ந்திருக்கும் இருக்கையில் தாய் – தகப்பன் என்ற உரிமையில் அந்த இருக்கையில் பங்கெடுக்க நினைக்க நினைத்தால் யாருக்கும் நிம்மதியாக இருக்க இடம் கிடைக்காது.
அதே போல்தான் சகோதர, சகோதரிகளின் உறவுகளும். இந்த உறவுக்கு இணையாக எதையும் கூற முடியாது. ஆனால் இந்த உறவும் நல்லுறவாக இருக்க வேண்டுமானால் இந்த உறவுக்கிடையில் கணவன் – மனைவி என்ற உறவு வந்தவுடன் தன் எல்லையை நிர்ணயித்து புதிதாக வாழ்வில் நுழைந்தவர்களுக்கு இலகுவான இடம் கொடுக்க வேண்டும், ஆனால் அதை தவிர்த்து தன் அண்ணன், தன் தம்பி, தன் தங்கை, தன் அக்கா என்ற உறவை புதிதாக வந்த உறவுகளிடம் நிலைநாட்ட முற்படும் பொழுது தன் உறவை சார்ந்து செல்வதா அல்லது புதிதாக வந்த உறவுக்கு மரியாதை கொடுப்பதா? என்ற குழப்பமே பல குடும்பங்களில் பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிது. தன் உறவை சார்ந்து செல்பவன் புதிய உறவுடன் பிரச்சினைக்கு ஆளாகிறான். ஆனால் புதிதாக வந்த மனைவி கணவன் மட்டுமே வாழ் நாள் முழுவதும் நமக்காக வாழப்போகிறவர்கள் என்று எதார்த்த முடிவு எடுக்கும் பொழுது பிறந்த நாள் முதலாக அன்பை பொழிந்தவர்களின் சொல்லுக்கு ஆளாகிறார்கள். இங்கும பிரச்சினைக்கு காரணம் உறவின் எல்லைகளை வரையறுக்காமல் எல்லை மீறி செல்வதே.
அடுத்து நாம் மிகவும் முக்கியமாக பேண வேண்டியது நாம் நம் குழந்தைகள் மீது காட்டும் பாசத்தை. நம் குழந்தைகள் நமக்குதான் பொக்கிஷமாக இருக்க முடியுமே தவிர மற்ற அனைவரும் நம் பிள்ளைகளிடம் நம்மைப் போலவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதின் விளைவு, யதார்த்தமாக நம்மையம் நம் குழந்தைகளையும் கடந்து செல்பவர்கள் மீதும் குரோதம், அதன் விளைவு உற்ற உறவுகளையும் உடைத்து தனித்து நிற்க நோிடுகிறது.
ஆக உறவு மே்படும் நிச்சயமாக அனைத்து உறவுகளிலும் நம் எல்லையை தெளிவாக நிர்ணயித்து கொண்டால்..



You must be logged in to post a comment.