இளைஞர் பாராளுமன்ற பேச்சு போட்டி மதுரை மண்டல அளவில் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் திட்ட அலுவலர் முனைவர். யேசுராஜன் பிரார்த்தனை செய்தார். மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அமெரிக்கன் கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ. செல்வன் வரவேற்புரை வழங்கினார்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். ம. தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார் மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற கட்டமைப்பு பற்றியும் விளக்க உரையாற்றினார். நாட்டு நலப் பணித்திட்ட மண்டல இயக்குனர் முனைவர். சி சாமுவேல் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “ஒரே நாடு ஒரே தேர்தல்’ தலைப்பு குறித்து உரையாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். மோ. பாண்டி கருத்துரை வழங்கினார். திட்ட அலுவலர் முனைவர். டாப்னி நன்றியுரை வழங்கினார் மற்றும் இதர திட்ட அலுவலர்கள் மங்கையர்க்கரசி ,சீலா, ர.பழனிச்சாமி , மு.ஞானமணி மற்றும் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி கருத்துக்கிணங்க ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ‘என்கின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு கல்லூரியில் 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற நேரு யுவகேந்திரா மாநிலத் தலைவர்
செந்தில்குமார் மற்றும் நாட்டு நலப்பணித் மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா விற்கும் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். ம. தவமணி கிறிஸ்டோபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
You must be logged in to post a comment.