இந்தியா தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் வாணி போக்குவரத்து நகர் வளாகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் 45 மரக்கன்றுகள் ஒவ்வொரு வீட்டின் முன் நடப்பட்டன.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் சேர்மன் ஹாரூன், பொருளாளர் குணசேகரன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் வள்ளிவிநாயகம் பசுமை ரெட் கிராஸ் அமைப்பாளர் மலைக்கண்ணன் மற்றும் போக்குவரத்து நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மரக்கன்றுகள் நட்டனர். ஏற்பாடுகளை பொறியாளர் சதீஷ்குமார் செய்திருந்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்




You must be logged in to post a comment.