இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளையின் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருமான முனைவர் எஸ். நடராஜன் IAS அவர்களுடைய அறிவுறுத்தல் படி சீமைக்கருவேல் மரங்களை வேரோடு அழிக்கும் பணியில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருவதோடு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சீமைக்கருவேல் மரக் கன்றுகளை வேரோடு கொண்டு வரும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் என ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 22.02.2017 புதன் கிழமை 30 மாணவ மாணவிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட சீமைக் கருவேல் மரக்கன்றுகளை பள்ளி வளாகத்திலிருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் கொண்டு வந்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளையின் துணைச் சேர்மன் எஸ். ஹாரூன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி பொறியாளர் எம். சுப்பிரமணியன் புரவலர்கள் ஜே. ரமேஷ் பாபு, எம். செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்ற ஊக்கப் பரிசுகள் வழங்கும் விழாவில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் ஏ. அப்துல் ரசீது மானவ மாணவிகளுக்கு ரூபாய் 2500/= மதிப்புள்ள ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளையின் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம், பொருளாளரும் அறிஞர் அண்ணா நடுநிலைப் பள்ளி ஆசிரியருமான சி. குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். ரெட்கிராஸ் அமைப்பினரின் இது போன்ற நல்ல முயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ரெட் கிராஸ் அமைப்பினருக்கு கீழை நியூஸ் வலை தளம் தன் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










சமூக பணிகளில்
கரம் கோர்த்தமைக்கு மிக்க நன்றி.