கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவினால் கிராமப்புறங்களைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதித்து வீடுகளில் முடங்கினர். அன்றாட
வாழ்வை நகர்த்த இயலாமல் சிரமப்படும் எளியோரின் தேவையறிந்து ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் கடந்த 7 வாரங்களாக பல்வேறு நிவாரண உதவி செய்து வருகின்றனர். மேலும் கொரானா பரவல் தடுப்பு பணியில் தன்னுயிரை பொருட்படுத்தாமல் சேவையில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்கள், செவிலியர்கள், போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், போலீஸ் நண்பர்களுக்கு குளிர்பானம், கை சுத்திகரிப்பான், சோப், முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கி வருகின்றனர். மேலும் இலங்கை அகதிகள் மற்றும் நலிவடைந்தோருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் கூட
ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் அருந்ததியர்
காலனி, நாகாச்சி மீனவ குடியிருப்பு, ராமநாதபுரம் சிதம்பரனார்
தெரு, அகதி சகோதரிகள் உள்ளிட்டோர் ரெட் கிராஸ் சொசைட்டியிடம் கொரானா வாழ்வாதாரம் நிவாரணம் கோரினர். இவர்களுக்கு ரெட் கிராஸ் சொசைட்டி
மாவட்ட செயலர் எம். ராக்லாண்ட் மதுரம், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ. வள்ளிவிநாயகம்,
ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் எம்.ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம்.பாலமுருகன்,
ரெட் கிராஸ் பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாக குழு உறுப்பினர் ஐ. தமிழரசு உள்ளிட்டோர்
அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறி தொகுப்பை நேரில் வழங்கினர். நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்டவர்கள் தேடி வந்து உதவும் ரெட் கிராஸ் மனித நேய சேவை, அதன் நிர்வாகிகளுக்கு நன்றி கூறினர்


You must be logged in to post a comment.